1.
உறவினர்கள் தரும்
வலி மரணத்தை விட கொடியது, அதனால் தானோ உறவுகளை வெறுக்க தோன்றுகிறது
2.
வெளுத்தது
எல்லாம் பால் என்று உறவுகளை நம்பினேன், நஞ்சை கக்கும் போது தான் தெரிந்தது விஷம்
என்று
3.
குறை சொல்ல தான்
உறவுகள் உள்ளது, நிறையை பொய் என்றே சித்தரித்து விடுகிறது
4.
சிறிய வயதில்
பாசத்தை காட்டிய உறவுகள், வளர்ந்த பிறகு பாசம் என்ற சொல்லை வாயில் மட்டும்
பேசுகிறது
5.
பணத்தை பார்தவுடன்
பாசத்தை மறக்கும் உறவுகள் உள்ளவரை பணம் மட்டுமே மதிப்பை தரும் பாசம் வெறுப்பை
மட்டுமே தருகிறது
6.
தடுக்கி
விழுந்தால் ஏற்றி விடும் உறவை விட, உன்னை தடுமாற செய்யும் உறவுகளே அதிகம்
7.
குளத்தில்
தண்ணீரும் தாமரை இலையும் ஒன்றாக இருந்தாலும் இலையில் தண்ணீர் ஒட்டுவதில்லை அது போல
தான் உறவும் உடன் இருந்தாலும் ஒட்டுவதில்லை
8.
உன் கண்ணீர்
துடைக்கும் உறவை விட உனக்கு கண்ணீர் வர வழைக்கும் உறவுகளே அதிகம்
9.
உறவுகளை நம்புங்கள்
ஆனால் சற்று தள்ளியே இருங்கள் அதீத நம்பிக்கை உன்னை அனைத்தையும் மறக்க வைக்கும்
10.
உனக்கு சொத்து
இருக்கும் வரையிலே உன் சொந்தம் உன்னோடு இருக்கும், இல்லை என்று தெரிந்ததும் சிறிது
சிறிதாக விலகி விடும்
11.
பணம் மட்டும்
தான் நம்மை உயர்த்தும் என்று நம்பும் உலகம் இருக்கும் வரை உறவுகளை நம்பாது
12.
உறவுகள் எல்லாம்
உண்மை என நம்பி விட்டால் கண்ணீரை பரிசாக பெற காத்திருக்க நேரிடும், எல்லாம் பொய்
என நம்பி விட்டால் தனி மரம் போல ஆகி விடுவாய்
13.
நம்பிக்கை தரும்
பேச்சு நாக்கில் மட்டுமே வைத்து கொண்டு மனதில் விஷத்தை வைத்திருக்கும் உறவு
என்றாவது ஒரு நாள் உன்னை பாதித்தே தீரும்
14.
உணவில் உள்ள
கருவேப்பிலை போல உன் உறவு உன்னை உணவு உண்ணும் போது தள்ளியே வைக்கும்
15.
சொத்தை
பிரிக்கும் போதே உன் உறவுகளின் உண்மை முகம் தெரியும், அதுவரையில் நீ அனைவரும்
நல்லவர்களே என்று நம்பி இருப்பாய்
16.
கூட்டு
குடும்பங்கள் ஒற்றுமையாக தான் இருக்கும் அண்ணன் தம்பிகளுக்கு கல்யாணம் ஆகாத வரை
17.
வீணாக உறவுகளை
நம்பி வீணாய் போவதை விட எதுவும் தேவை இல்லை என்று விலகி இருப்பதே மேல்
18.
கானல் நீரை
போன்றது உறவினர்களின் பாசம் தூரத்தில் பார்க்கும் போது இருப்பது போல தோன்றும்
நெருங்கி சென்றால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும்
19.
நல்லவர்கள் போல
நடித்து ஏமாற்றுவது சொந்தகர்களின் பழக்கம் எப்பவும் ஏமாறுவது என்னுடைய வழக்கம் அவை
நடிப்பு அல்ல உண்மை என்று நம்பியதால்
20.
வாழ்வில் ஒரு
முறையாவது நல்ல உறவு கிடைக்கும் என்று ஏங்கினேன் இன்னுமும் ஏங்கி கொண்டே தான்
இருக்கிறேன்
உறவுகள் என்பது
உண்மையில் பகல் கனவு போன்றது இறுதி வரை கனவாகவே இருக்கும் நிஜத்தில் பாசம் எனும்
ஆயுதத்தை வைத்து அனைவரையும் ஏமாற்றும் – எல்லோர் இடமும் பாசமாக இருங்கள் ஆனால்
யாரையும் நம்பி விடாதிர்கள்
பாசமாய் இரு,
ஆனால் பத்தடி தள்ளியே இரு
நம்பிக்கை வை, ஆனால்
உண்மையில் நம்பி விடாதே
உண்மையை இரு, ஆனால்
உமையாய் இருந்து விடாதே
விட்டு கொடுத்து
போ, ஆனால் எப்பவும் விட்டு கொடுக்காதே
கைமாறாக பணத்தை
கொடு, ஆனால் கடனாய் கொடுக்காதே